கோவையில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மகாவீர் ஜெயந்தியையொட்டி கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மகாவீர் ஜெயந்தியையொட்டி கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கோவை ரங்கே கவுடர் வீதியில் சுபாஷ்நாத் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இங்கு வர்த்தமான மகாவீரர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மகாவீரர் பிறந்தநாளில் அவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, மகாவீரர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement