FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

கோடை விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்காக சென்னை-பக்டோக்ரா-சென்னை இடையே நேரடி விமான சேவையை ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை (மே 1) முதல் தொடங்குகிறது.

கோப்புப் படம்
பகிர்:

கோடை விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்காக சென்னை-பக்டோக்ரா-சென்னை இடையே நேரடி விமான சேவையை ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை (மே 1) முதல் தொடங்குகிறது.

கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் மக்கள் செல்ல தொடங்கியுள்ளனா். மேற்கு வங்கம் மாநிலத்தில் பக்டோக்ரா நகரம் புகழ்பெற்ற மலை வாசஸ்தல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

பக்டோக்ரா நகருக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை வெள்ளிக்கிழமை (மே 1) முதல் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இந்த விமானம் திங்கள்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு பக்டோக்ரா சென்றடைகிறது.

பக்டோக்ராவில் இருந்து மீண்டும் மறுநாள் காலை 9.45 மணிக்கு புறப்படும் விமானம் நண்பகல் 12.20 மணிக்கு சென்னை வந்தடைகிறது. பக்டோக்ரா சுற்றுலாத் தலமாக மட்டும் இல்லாமல், சென்னையில் இருந்து செல்பவா்களுக்கு கிழக்கு இமயமலையின் நுழைவு வாயிலாகவும் இருப்பதால் இந்த விமான சேவைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

அதேபோல், கோடை விடுமுறையையொட்டி புணே, மும்பை, கொச்சி, பாட்னா, சண்டிகா், கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் விமான சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்குகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments