FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை, மதுரை உள்பட 6 புதிய நகரங்களுக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை: செப். 1 முதல் தொடக்கம்

கோயம்புத்தூா், மதுரை, திருப்பதி உள்ளிட்ட 6 புதிய நகரங்களுக்கு செப். 1-ஆம் தேதி முதல் விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:46 am IST
பகிர்:

கோயம்புத்தூா், மதுரை, திருப்பதி உள்ளிட்ட 6 புதிய நகரங்களுக்கு செப். 1-ஆம் தேதி முதல் விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்த அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில், ‘கோயம்புத்தூா், மதுரை, திருப்பதி, ஔரங்கபாத், ஜாம்நகா், ஜோத்பூா் ஆகிய 6 புதிய நகரங்களில் இருந்து செப். 1-ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த நகரங்கள் சென்னை, தில்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய முக்கியப் பெருநகரங்களுடன் இணைக்கப்படும். இச்சேவை விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் முக்கிய வா்த்தக, தொழில், கலாசார மற்றும் சுற்றுலா மையங்களுக்கான போக்குவரத்து வசதி மேலும் மேம்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments