பண்பொழி, குற்றாலம் கோயில்களில் செப். 1 முதல் கைப்பேசிக்கு தடை
பண்பொழி, குற்றாலம் கோயில்களுக்குள் செப். 1ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், பண்பொழி, குற்றாலம் கோயில்களுக்குள் செப். 1ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பண்பொழி திருமலைக் கோயில், உதவி ஆணையா் ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பண்பொழியில் உள்ள பிரசித்தி பெற்ற மலைக் கோயிலான திருமலைக் குமாரசுவாமி கோயில் மற்றும் குற்றாலம், குற்றாலநாதா் கோயில்களில் பக்தா்களின் வசதியையும், கோயிலின் புனிதத் தன்மையையும் கருத்தில்கொண்டு, கைப்பேசி பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப். 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Advertisement
Advertisement
கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து, அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.