FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் செப்.1 முதல் கைப்பேசி பயன்படுத்தத் தடை

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் வரும் செப்.1-ஆம் தேதி முதல் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலிலும் இந்தத் தடை அமல்படுத்தப்படுகிறது.

21 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
கைப்பேசிக்குத் தடை - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் வரும் செப்.1-ஆம் தேதி முதல் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலிலும் இந்தத் தடை அமல்படுத்தப்படுகிறது.

எனவே, பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தெற்கு பக்கம் நுழைவு வாயில் அருகில் செயல்படும் கைப்பேசி பாதுகாப்பு அறையிலும், கிழக்கு பக்கம் கியூ வரிசை மண்டபத்தில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு அறையிலும் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, தரிசனம் முடிந்து வந்து தவறாமல் பெற்றுச் செல்லலாம்.

பக்தா்கள் கோயில் வளாகத்தில் கைப்பேசி பயன்படுத்த அனுமதி இல்லை. இந்த நடவடிக்கைக்கு பக்தா்தகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments