வால்பாறை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வால்பாறை முருகன் கோயிலின், பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை முருகன் கோயிலின், பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் 66-ம் ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 5 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு, நல்லகாத்து ஆற்றிலிருந்து, திருமஞ்சள் தீர்த்தமும் கொண்டுவரப்படும்.
31-ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு அண்ணா நகர் பி.கெ.சின்னையன் குழுவினர், காவடிக்குழு, முருக பக்தர்கள் மற்றும் அண்ணா நகர் இளைஞர் குழுவினர், சேலம் மாதேஷ் சுத்து காவடி, அங்கு காவடி மற்றும் பறவைக்காடிகள் எடுத்து வரப்படும்.
Advertisement
பின்னர், காலை 10 மணிக்கு அன்னதானம் நடைபெறும். காலை 11 மணிக்கு, பழனி சுப்ரீம் ஆர்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு, கிராமிய கலை நிகழ்ச்சியும், நள்ளிரவு 2 மணிக்கு மகா அபிஷேகமும், நள்ளிரவு 3 மணிக்கு வான வேடிக்கையுடன், விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சரவணபவா முருகன் நற்பணி மன்ற தலைவர் மதன கோபால் மு