செய்திகள்

ஆண்டாள் கோயிலில் சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு

DIN

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருள்வார். 

அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதிகாலையில் புராணம்  வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகுதியில்லாத மின்னணு இயந்திரங்கள்: திருப்பி அனுப்ப ஆட்சியா் நடவடிக்கை

ஜன.16, 26 தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

விழுப்புரத்தில் பேருந்து சேவைகளில் மாற்றம்: மாவட்டக் காவல் துறை

இருதரப்பினரிடையே மோதல்: நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட மூவா் கைது

காவல் உதவி செயலி: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT