செய்திகள்

தாய், தந்தையருக்காகப் பகவான் கிருஷ்ணரையே காக்க வைத்த பக்தன்! 

பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு இந்த சந்தேகம் ஏற்படும். கடவுளுக்கு முதலில்///

தினமணி

பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு இந்த சந்தேகம் ஏற்படும். கடவுளுக்கு முதலில் வழிபாடு செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது. 

முதலில் பித்ருக்களைதான் நாம் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண கதையும் இருக்கின்றது. 

பகவான் பாண்டுரங்கள் ஒரு முறை தன் பக்தன் ஹரிதாசரைப் பார்க்கச் சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். 

பகவானைக் கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானைப் பார்த்து, சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணிவிடைகளை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக்காட்டினாராம். 

உடனே பகவான் பாண்டுரங்கன் அந்தச் செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணிவிடைகளை முடித்துவிட்டு வந்த பிறகு அவருக்குப் பகவான் ஆசி வழங்கினாராம். 

எனவே நம் வீட்டுப் பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய் தந்தையை பட்டினி போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT