செய்திகள்

மீன ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சியால் எதிர்பாராத பணவரவு கிடைக்குமாம்! 

தினமணி

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் மீன ராசிக்குத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மீனம்: (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசிக்கு குருவின் பார்வை. ராசியதிபதி குரு 9-ம் வீட்டில் இடம் பெயர்ச்சியாகிறார். இது ஒரு மிக உயர்ந்த கிரக நிலை “ஓடிப் போனவனுக்கு 9-ல் குரு” என்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கோச்சாரரீதியாக 9-ல் குரு வந்திருக்கின்றது. ஆக இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்தான். ஒருவர் எவ்வளவுதான் கெட்டிக்காரராக இருந்தாலும் தெய்வ அருள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியாது. இந்தப் பெயர்ச்சி மூலம் இவர்களுக்கு தெய்வ அருள் கூடவே வருகிறது.   

ராசிக்காரரின் வாழ்க்கைத் துணைவருக்கோ அல்லது வாழ்க்கைத் துணைவிக்கோ எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகக் காணப்படுகிறது. இளைய சகோதரத்திடமிருந்து உதவிக் கிடைக்கும். இதுவரையில் மனத்தாங்கல் இருந்தால் அவை சரியாகிவிடும். வெளியூர்ப்பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும். தொழில் சம்மந்தமாக வெளியீர்ப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுபச் செய்திகள் இவர்களுக்குக் கிடைக்கும்.

தாயாருடனான உறவு சற்றுப் பின்னடையும். ஆகவே உறவை மோசமடையச் செய்யாது நிதானமாக நடந்து கொள்ளவும். வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க நினைப்போருக்கு அவை வாங்கி முடிக்க சற்றுத் தாமதமாகும். சற்றுத் தாமதம்தானே தவிர முடியாமல் போகாது. மாணவர்கள் படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கவனத்தைச் சிதறவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.  

புத்திர பாக்கியத்திற்காகக் காத்திருப்போருக்கு வரும் பங்குனி மாதத்திற்குமேல் நல்ல காலம் காத்திருக்கிறது. இதுவரையில் புத்திரப் பிறப்பு சம்மந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு பங்குனிக்குமேல் எல்லாம் சரியாகிவிடும். 

திருமணமாகாதோருக்கு சில தடைகளுக்குப் பிறகு திருமணம் நடக்கும். அந்தத் தடைகளுக்காகக் கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். நீதிமன்றம், கேஸ் என்று அலைந்து கொண்டிருப்போருக்கு அவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் பிரதிகூலத்தைவிட அனுகூலமே அதிகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT