ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி தலத்தில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் (குரு பரிகார ஸ்தலம்) 04-10-2018 அன்று குருப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி தலத்தில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் (குரு பரிகார ஸ்தலம்) 04-10-2018 அன்று குருப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் தெட்சிணாமூர்த்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு தெற்கு கோபுர வாயிலிலுள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர், சுவாமி, அம்பாள், உட்பிரகாரத்திலுள்ள வள்ளி தெய்வானை சமேத திருமுருக கடவுள் மற்றும் வெளி பிரகாரத்தில் மேற்கு திசை நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ள அருள்மிகு சனிஸ்வரர் ஆகிய தெய்வ திருமேனிகளுக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தார்கள்.