முகப்பு
செய்திகள்

ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி விழா வழிபாடு

கும்பகோணம் அடுத்துள்ள  நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும்  அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள்  திருக்கோயிலில், புரட்டாசி  மாத வளர்பிறை அஷ்டமி  தினமான

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி  மாத வளர்பிறை அஷ்டமி  தினமான  17-10-2018 அன்று திருக்கோயில் வளாகத்தில் காலை 11மணி முதல் மதியம் 2 மணிவரை சிறப்பு பூஜையாக ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து,  தாயாருக்கு  சிறப்பு திருமஞ்சனமும், பின்னர்  அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது.

இவ்விழாவில், அருள்மிகு செண்பகவல்ல்லி தாயார் [உற்சவர்] ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் கண்டு வழிபாடுகள் செய்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.