செய்திகள்

63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாதநாயனார் குருபூஜை விழா

DIN

கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் அருகில் உள்ள 61-ஏனாதிநல்லூர், அருள்மிகு கற்பகம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், ஆறாம் நூற்றாண்டில் சிவதொண்டாற்றிய தீருநீற்றில் பேரன்பு  கொண்டு வாழ்ந்து தனது உயர்ந்த பக்தியால் இறைவனுடன் நிறைந்த 63 நாயன்மார்களில் ஒருவரான, அருள்மிகு ஏனாதிநாத நாயனாரின்  குருபூஜை மிகச்  சிறப்பாக நடைப்பெற்றது. 

இவ் விழாவினையொட்டி,  17-10-2018  அன்று காலை இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள், மற்றும் ஏனாதிநாத நயனார் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், அதன் பின் தூப- தீப ஆராதனைகளும், அதனைத் தொடர்ந்து, மாலை  உற்சவர் வீதிஉலா நடைப்பெற்றது. இவ்விழாவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும்  பிரசாதங்கள்  வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை ஏனாதி நாத நாயனார் வழிபாட்டு நற்பணி மன்றம் மற்றும் கிராமவாசிகளும் செய்திருந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT