செய்திகள்

திருப்பதி நடைபாதை வழியாகச் செல்வோரின் கவனத்திற்கு! 

தினமணி

திருமலை நடைபாதை மார்க்கத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதால் மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த வியாழனன்று திருமலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடைபாதை வழியாகப் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடைசிப் படிகளின் அருகே வனத்திற்குள் இருந்து ஒரு சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட பக்தர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கண்காணிப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தச் சிறுத்தையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மலைப்பாதையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 

வறட்சியின் காரணமாக நீர் பருக வனவிலங்குகள் வெளியில் சுற்றி திரிந்து வருகின்றன. எனவே, நடைபாதை வழியாகத் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமாகவும், பலத்த விழிப்புடனும் செல்லுமாறு திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT