செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.50 கோடி

தினமணி


ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.50 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனர். அதன்படி சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ.3.50 கோடி வசூலானது. 
ரூ.26.60 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.14.60 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.26.60 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT