செய்திகள்

திருச்சானூரில் பவித்ரோற்சவம் தொடக்கம்

தினமணி

திருச்சானூரில் உள்ள பத்மாவதித் தாயார் கோயிலில் தோஷங்களைப் போக்கக் கூடிய வருடாந்திர பவித்ரோற்சவம் ஆகம விதிகளின்படி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள், பக்தர்களால் அறிந்தும் அறியாமலும், கைங்கரியங்களில் நடைபெற்ற தோஷங்களைப் போக்க ஆண்டுதோறும் வருடாந்திர பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை இக்கோயிலில் பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது. அன்று காலையில் சுப்ரபாத சேவையின்போது தாயாரை துயிலெழச் செய்து, அவருக்கு அபிஷேகம் தூப, தீப, ஆராதனைகள், நைவேத்தியம் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து தாயாரை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்தனர்.
 அங்கு துவார தோரண துவஜகும்ப ஆவாகனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஸ்தான அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை மற்றும் பல வண்ண பட்டு நூல்களால் செய்யப்பட்ட புனிதமான மாலைகளின் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் ஸ்ரீகிருஷ்ண சுவாமி மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ச்சகர்கள், பக்தர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி, சில ஆர்ஜித சேவைகளை கோயில் நிர்வாகம் ரத்து செய்தது.
 மூன்று நாள்களுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தில் ரூ.750 கட்டணம் செலுத்தி பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்கும் தம்பதியருக்கு 2 லட்டுகளும், 2 வடைகளும் பிரசாதமாக வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT