செய்திகள்

சிவன்மலை முருகன் கோயிலில் நாளை ஆடி சஷ்டி விழா

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி சஷ்டி மற்றும் அன்னதான விழா நாளை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, சிவன்மலை மீது வீற்றிருக்கும் வள்ளிநாயகி தேவசேனா உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு வழிபாடும், சுவாமி திருவீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. 

பின்னர் பகல் 12 மணியளவில் மலைக் கோயிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 7 மணிக்கு துவங்கி பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பகல் முழுவதும் அன்னதானமும் நடைபெறவுள்ளது.

சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை திருப்பூர் உதவி ஆணையர் ரெ.சா.வெங்கடேஷ், சிவன்மலை உதவி ஆணையர் எம்.கண்ணதாசன் ஆகியோர் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT