செய்திகள்

திருமலையில் அன்னதானம், குடிநீர் வழங்கவில்லை: பக்தர்கள் அதிருப்தி

தினமணி

திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்தவர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படவில்லை என தேவஸ்தானம் மீது பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். 
திருமலையில் தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 
அதனால் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம், குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வழங்கவில்லையாம்.   
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் குடிநீர், திண்பண்டங்கள், காபி, டீ, குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். 
இதனால் பக்தர்கள் தேவஸ்தான நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்தனர்.  
இதுகுறித்து அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT