செய்திகள்

தை அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

DIN

தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். 

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். 

அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் குவிர்ந்தனர். 

நீர்நிலையில் ஏராளமான சிவாச்சாரியார்கள், அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள் செய்தனர். பின்னர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். 

25 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகோத்தவ அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT