திருமலை : 84,148 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 84,148 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 21,789 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 84,148 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 21,789 பேர் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை நிலவரப்படி, 2 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
அவர்களின் தரிசனத்துக்கு 4 மணி நேரம் வரை தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,753 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,616 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 18,861 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,327 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
உண்டியல் காணிக்கை ரூ. 2.65 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 2.65 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு, ரூ. 2.65 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ. 24.27 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 23.27 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 24.27 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
சோதனைச் சாவடியில் ரூ.1.95 லட்சம் வசூல்
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு 12 முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 82,583 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 10,402 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம், ரூ. 1.95 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 11,833 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.