செய்திகள்

மாசி மக உற்சவம்: கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் வீதியுலா

DIN


மாசி மக உற்சவத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ஆதிதேகவப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயிலில் மாசி மக உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் கடந்த 4 நாள்களாக காலை, மாலை நேரங்களில் வீதி உலா வந்தார். உற்சவத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை காலையில் பெருமாள் கருட வாகனத்திலும், ராமாநுஜர் பல்லக்கிலும் வீதி உலா வந்தனர்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் ஆதிகேசவப் பெருமாளுக்கும், ராமாநுஜருக்கும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து மதியம் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆதிகேசவப் பெருமாளையும், ராமாநுஜரையும் தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT