செய்திகள்

பட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழங்களை சூறையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் 

தினமணி

பட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழங்களை சூறையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி கிராமம் உள்ளது.  இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் தேதி வாழைப்பழம் சூறையிடும் வினோத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்தாண்டும் சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழ சூறையிடும் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள் வாழைப்பழங்கள் கூடைகளில் வைத்து பூஜை செய்தனர்.

ஆண்கள் மட்டும் தலையில் சுமந்தபடி மேளதாளம் முழுங்க ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர். இந்த ஊர்வலம் சோலைமலை அழகர் பெருமாள் கோயிலை வந்தடைந்து வாழைப்பழங்களை சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டிபோட்டு சூறையிட்ட பழங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT