செய்திகள்

அத்திவரதர் தரிசனத்துக்கு இன்று முதல் 6 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழாவையொட்டி, கடந்த 1-ம் தேதி முதல்..

DIN



காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழாவையொட்டி, கடந்த 1-ம் தேதி முதல் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கும் புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது .

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கைகளுக்கு இணங்க, மேலும் 6 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. 

முதல் ரயில், காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை மார்க்கத்தில், காஞ்சிபுரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.20 மணிக்கு செங்கல்பட்டு வந்து, பின்னர் சென்னை கடற்கரையை அடையும். 2-வது ரயில் காஞ்சிபுரத்திலிருந்து மாலை 4.30-க்கு புறப்பட்டு செங்கல்பட்டு வழியாக மாலை 5.40-க்கு தாம்பரம் செல்லும்.  

3-வது ரயில் இரவு 7.45-க்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வழியாக இரவு 11.40-க்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.

4-வது ரயில் சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் மார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும்.

5-வது ரயில் சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு வழியாக காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும்.

6-வது ரயில் செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும். 

இவ்வாறு 6 சிறப்பு ரயில்கள் அத்திவரதர் பெருவிழாவையொட்டி இயக்கப்படவுள்ளன.  பக்தர்கள் இதனைப் பயன்படுத்தி அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT