முகப்பு
செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Updated On : 8 ஜூலை, 2019 at 12:58 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:58 PM


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கியது. 

இதையடுத்து, இன்று காலை கொடியேற்றம் வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட உற்சவ சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஜூலை 17-ம் தேதி 10 நாள் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.