செய்திகள்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்

DIN

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை இன்று (ஜூலை 17)  தொடங்கி, ஒரு மாத காலம் நடைபெறுகிறது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இக்கோயிலில் நடைபெறும் ஆடி லட்சார்ச்சனை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. 

ஜூலை 19-ம் தேதி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ஜூலை 26-ல் அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், ஆகஸ்ட் 2-ல்  சந்தனக்காப்பு அலங்காரம், ஆகஸ்ட் 9 இல் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, கடைசி வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 16-ம் தேதி ஆடி லட்சார்ச்சனை வேள்வி மற்றும் தங்கக் கவச அலங்காரம் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து, அன்றிரவு மகாஅபிஷேகம் மற்றும் பெரியநாயகியம்மன் வெள்ளித் தேரில் வீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT