செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும்: ஆட்சியர் பேட்டி

தினமணி

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை காண நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. கடந்த 21 நாட்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்த போது, 

தொடர்ந்து 22-வது நாளாக அத்திவரதரை தரிசிக்கப் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ முகாம்களும், ஓய்வறை வசதிகள், கழிப்பறை வசதிகள், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!

அத்திவரதர் சிலை இடம் மாற்றம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை. மேலும், அத்திவரதரை மீண்டும் பூமிக்குள் வைக்கக்கூடாது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் விடுத்துள்ள கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆகம விதிகளைக் கணக்கில் கொண்டு முடிவெடுப்பர் எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT