செய்திகள்

அத்திவரதரை தரிசனம் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காஞ்சிபுரம் அத்திவரதரை இன்று காலை தரிசித்தார்.

தினமணி


காஞ்சிபுரம்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காஞ்சிபுரம் அத்திவரதரை இன்று காலை தரிசித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. தினமும் வெளி மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர். 

48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தின் 31-வது நாளாக இன்று பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். சயன கோலத்தில் தரிசிக்க இன்றே கடைசி என்பதால் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கத் திரண்டுள்ளனர். 

நாளை முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தர உள்ளார். எனவே அத்திவரதரை தரிசனம் செய்வதற்காகத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களும், முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகளும் தரிசித்துச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT