செய்திகள்

திருச்சானூர் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்

DIN


திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தேவஸ்தானம் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் 17-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு தெப்போற்சவம் தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தாயார் கோயிலில் உள்ள ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ண சுவாமி தெப்பத்தில் 3 முறை வலம் வந்தார். 
தெப்போற்சவத்தைக் காண பக்தர்கள் திருக்குளக்கரையில் திரண்டனர். உற்சவ மூர்த்திகள் அருகில் வந்தபோது, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். 
 தெப்போற்சவத்தை முன்னிட்டு, திருக்குளக்கரை மின்விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மாலை வேளையில் கோயிலில் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT