அத்திவரதர் வைபவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் கவனத்திற்கு..!
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை..
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதர் அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு நேற்று முன்தினம் எழுந்தருளியுள்ளார். வரும் ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்கள் ஆதி அத்தி வரதரைக் கண்ணாறா கண்டு மகிழலாம்.
ஸ்ரீ அத்திவரதர் வைபவத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு..
ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்திற்கான சஹஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 500 எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்படும். அதில் காலை 11.00 மணி தரிசனத்திற்கு 250 டிக்கெட்டுகளும், மாலை 3.00 மணி தரிசனத்திற்கு 250 டிக்கெட்டுகளும் வெளியிடப்படும்.
மேற்படி அர்ச்சனை டிக்கெட்டுகளை தரிசனத் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மட்டுமே ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலும். 04.07.2019 முதல் சஹஸ்ரநாம அர்ச்சனை மேற்கொள்ளப்படும். இதற்கான அர்ச்சனை டிக்கெட்டுகளை 02.07.2019 முதல் இத்துறை இணையதளமான www.tnhrce.gov.in இல் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
காலை 11.00 மணி சஹஸ்ரநாம அர்ச்சனைக்கான சேவார்த்திகள் காலை 10.30 மணிக்குள் மேற்கு இராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாலை 03.00 மணி சஹஸ்ரநாம அர்ச்சனைக்கான சேவார்த்திகள் மாலை 02.30 மணிக்குள் மேற்கு இராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய நேரத்தில் ஆஜராகத் தவறினால் தரிசனத்திற்கு உரிமைகோர இயலாது.
சேவார்த்திகள் திருக்கோயிலுக்கு வருகைதரும்போது ஆதார் அட்டையினை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓரே டிக்கெட்டில் பதிவு செய்த சேவார்த்திகள் அனைவரும் ஒரே நேரத்தில் மேற்கு இராஜகோபுரத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்ய திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கான தேதியை மாற்றுவதோ, ரத்து செய்வதோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்கான தொகையினை திரும்பப்பெற இயலாது.