கோப்புப்படம் 
செய்திகள்

ஆதி அத்தி வரதரைக் காண வருவோருக்குச் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன விழாவுக்காக ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம்..

தினமணி

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன விழாவுக்காக ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 40ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே அத்திவரதர் தரிசன காலத்தில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஆதி அத்திவரதர் எதற்காக குளத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..

இதை ஏற்ற தெற்கு ரயில்வே நிர்வாகம் அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ஜூலை 1 முதல் இயக்கப்படும் இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு காஞ்சிபுரத்தை 11.52-க்கும், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தை 11.58-க்கும் சென்றடையும். அங்கிருந்து செங்கல்பட்டுக்கு 12.50-க்கு சென்று சேரும். 

மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.30-க்கு புறப்பட்டு, 2.15-க்கு காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தையும், 2.20-க்கு காஞ்சிபுரம் ரயில் நிலையத்தையும் அடைந்து, அங்கிருந்து அரக்கோணத்துக்கு 3.15-க்கு வந்து சேரும். 

இந்த ரயில் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். மேலும் சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 3 மணி, இரவு 8.09 மணிக்கு திருமால்பூருக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக காலை 7.25-க்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருமால்பூரில் இருந்து காலை 10.40, மாலை 6.40-க்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT