செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நாளை தீமிதி உற்சவம்

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி திருவிழாவின் 5-ம் நாளான நாளை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. 

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த 5-ம் தேதி மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நாளை மாலை தீமிதி உற்சவம் நடைபெற உள்ளது. 

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட உள்ளது. 7-ம் நாளான திங்கள்கிழமை திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், கூடுதல் உதவி ஆணையர் மோகனசுந்தரம், அறங்காவலர் கு.கணேசபூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT