திருமலையில் உள்ள வராக சுவாமி கோயில். 
செய்திகள்

வராக சுவாமி கோயிலில் ஏப். 27-இல் குடமுழுக்கு

திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் ஏப்ரல் 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN


திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் ஏப்ரல் 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 திருமலையில் ஏழுமலையான் நிலைபெற இடம் அளித்தவர் ஆதிவராக சுவாமி. வெங்கடாசல புராணத்தில் இதுகுறித்த குறிப்புகள் உள்ளன. 
மேலும், ஏழுமலையான் நிலை பெற வராக சுவாமி திருமலையில் நிலம் அளித்ததற்கான செப்புப் பட்டயமும் தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால், திருமலையில் சேத்திர சம்பிரதாயத்தின்படி, முதல் பூஜை, முதல் நைவேத்தியம், முதல் தரிசனம் எல்லாம் வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 
 ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் வராக சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், மகா சம்ப்ரோக்ஷண விழா ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்குகிறது. 
இதை முன்னிட்டு, ஏப்ரல் 22-இல் முளைவிடும் உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரை கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
 அன்றிரவு இரவு 7 முதல் 9 மணி வரை வராக சுவாமி மாட வீதியில் வலம் வர உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT