செய்திகள்

தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களின் ஆர்ஜித சேவா டிக்கெட் ஏப்.5-இல் வெளியீடு

ஏழுமலையான் கோயில் தவிர திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் மற்ற கோயில்களின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வரும் ஏப். 5-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

DIN


ஏழுமலையான் கோயில் தவிர திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் மற்ற கோயில்களின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வரும் ஏப். 5-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
இது தொடர்பாக தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் கூறியது:
தேவஸ்தானம் நிர்வகிக்கும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், திருப்பதி கோவிந்தராஜர் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில், ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோயில், திருப்பதி கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடத்தப்படும் ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் தற்போது ஏற்படுத்தியுள்ளது. 
அதன்படி ஜூலை மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வரும் ஏப்.5-ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்து கொண்டு ஆர்ஜித சேவையில் பெருமாளையும், அம்மனையும் தரிசிக்கலாம். 
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான வாடகை அறை வளாகங்களின் ஜூலை மாத இணையதள முன்பதிவும் ஏப்.5-இல் தொடங்க உள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு

SCROLL FOR NEXT