செய்திகள்

திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயில் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 

அதன்படி, இம்மாதம் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து விளக்கேற்றுகிறார். இரவு 10 மணி அளவில் நடை அடைக்கப்படும். 

மீண்டும் நாளை காலை 5.00 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனத்துக்குப் பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு நெய் அபிஷேகத்தைத் துவங்கிவைப்பார். 

செப்.11-ம் தேதி திருவோண தினத்தன்று ஐயப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும். அதன்பின்னர், செப்.13 இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT