செய்திகள்

திருமலை: உண்டியல் காணிக்கை ரூ. 3.06 கோடி

தினமணி


திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.06 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3.06 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 24.69 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 3.36 லட்சம்,  ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப் பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.  11 லட்சம், உயிர் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம்,  பர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 11 ஆயிரம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 22 ஆயிரம் என மொத்தம் ரூ. 24.69 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

 77,587 பக்தர்கள் தரிசனம் 
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 77,587 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 29,558 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் 4 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர். 
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 10,677 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 8,329 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 20,023 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,668 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,956 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.05 லட்சம் கட்டண வசூல்
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 80,278 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 8,907 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.05 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 26,876 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகார் அளிக்க...
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT