செய்திகள்

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்ட திருவிழா

தினமணி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி, இந்தாண்டு ஆடி திருவிழாவின் 9-ம் வாரமாக நேற்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக பல வண்ண மலர்களைக் கொண்டு தேர் அலங்கரிப்பட்டடு, அதில் உற்சவர் தேவி கருமாரியம்மன் எழுந்தருளினார். 

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "ஓம் சக்தி பராசக்தி" என்று கோஷங்கள் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அங்குள்ள முக்கிய வீதிகளில் அலங்கரிப்பட்ட அம்மனின் தேர் ஊர்வலமாக வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத் திருவிழாவில் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT