செய்திகள்

திருமலை பிரம்மோற்சவம்: தெலங்கானா முதல்வருக்கு ஆந்திர முதல்வர் அழைப்பு

DIN


திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்துக்கு வரும்படி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்கள்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.
திருமலையில் வரும் செப். 30-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்நிலையில்,திங்கள்கிழமை ஹைதராபாதிற்குச் சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பிரம்மோற்சவ அழைப்பிதழ் அளித்து அழைத்தார். அதைப் பெற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவ், நிகழ்ச்சிக்கு கட்டாயம் வருவதாகத் தெரிவித்தார். ஆந்திர முதல்வருடன் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, எம்.பி.க்கள் பிரபாகர ரெட்டி, மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் சென்றனர். 
ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்த பின், இதுவரை இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. இதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதல் முறையாகத் தொடங்கியுள்ளார். இதுவரை இல்லாத நிகழ்வாக அண்டை மாநில முதல்வரிடம் பிரம்மோற்சவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றபின், தெலங்கானா அரசுடன் நட்பு கொண்டாடுவதுடன் ஆந்திர-தெலங்கானா இடையில் உள்ள பிரச்னைகளை அம்மாநில அரசுடன் சுமுகமாக உரையாடித் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT