செய்திகள்

திருப்பதி தேவஸ்தான நிதிகளை வீணடிப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், முடி காணிக்கை வருமானம் மற்றும் அளிக்கும் நன்கொடைகள் தேவஸ்தானத்துக்கு வருவாயை ஈட்டித் தருகிறது.

தினமணி

திருப்பதி, செப். 28: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதிகளை வீணடிப்பதாக ஆந்திர உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், முடி காணிக்கை வருமானம் மற்றும் அளிக்கும் நன்கொடைகள் தேவஸ்தானத்துக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. இப்பணத்தை தேவஸ்தான அறக்கட்டளைகளின் பெயரில் வங்கியில் வரவு வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் வளா்ச்சிப் பணிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், திருப்பதி புறவழிச் சாலையிலிருந்து திருப்பதி மலையடிவாரமான அலிபிரிக்கு நேரடியாகச் செல்ல நகராட்சி கருடாவாரதி என்ற பெயரில் மேம்பாலப் பணிகளை தொடக்கி நடத்திவருகிறது. இதற்கு தேவஸ்தானம் ரூ.458 கோடி அளிப்பதாக நகராட்சியிடம் தெரிவித்தது. தற்போது மேம்பாலப் பணிகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேவஸ்தானத்தின் நிதிகளை கோயில் திருப்பணிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட இறைவழிபாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதைத் தவிா்த்து, அந்த நிதிகளை மேம்பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு பயன்படுத்தி வீணடிக்கக் கூடாது. மேலும், மேம்பாலம் கட்டுவது நகராட்சிக்கு உள்பட்ட பணி. அதற்கு தேவஸ்தானத்தின் நிதிகளை அளிக்கக் கூடாது என்று ஆந்திர உயா் நீதிமன்றறத்தில் ஆந்திர மாநில பாஜக செயலா் பானுபிரகாஷ் ரெட்டி, சனிக்கிழமை பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் விளக்கமளிக்க வேண்டும் என்று இருவருக்கும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி மீது தாக்குதல்: அன்று நீதிமன்றம் சென்றது ஏன்? வழக்குரைஞரின் அதிர்ச்சியூட்டும் பதில்

இஸ்ரேலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் Stalin பேச்சு

பிக் பாஸ் வீட்டுக்கு சீல்! போட்டியாளர்கள் வெளியேற்றம்! ஏன்?

சிறையில் இஸ்ரேல் ராணுவத்தினர் துன்புறுத்தினர்: கிரெட்டா தன்பெர்க்

மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சௌமன் சென் பதவியேற்பு!

SCROLL FOR NEXT