முகப்பு
செய்திகள்

ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் இதுதான்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை..

Updated On : 12 செப்டம்பர் 2019, 1:05 pm IST
பகிர்:


திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை (செப்.13) கிரிவலம்  செல்ல உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், ஆவணி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8.19 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை (செப்.14) காலை 10.19 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.