ஆம்பூர் அருகே மார்கழி மாதப் பிறப்பையொட்டி திருவீதியுலா வந்த நடராஜர்
மார்கழி மாதப் பிறப்பையொட்டி ஆம்பூர் அருகே சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.
மார்கழி மாதப் பிறப்பையொட்டி ஆம்பூர் அருகே சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.
ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சியில் உள்ளது பள்ளித்தெரு. இன்று புதன்கிழமை மார்கழி மாதம் பிறந்ததை ஒட்டி இந்த ஊரில் உள்ள சிவனடியார்கள் நடராஜரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு திருவீதி உலா தொடங்கியது. தேவார திருவாசக மந்திரங்கள் ஓதியும், பஜனைப் பாடல்கள் பாடியவாறும் பள்ளித் தெரு, காந்திநகர், நெமிலிபுரம் வீதிகள் வழியாக நடராஜர் திருவீதியுலா வந்தார்.
காலை 7 மணிக்கு சிவாலயம் அருகே திருவீதியுலா நிறைவு பெற்றது.
Advertisement
மார்கழி மாதம் முழுவதும் நடராஜர் திருவீதியுலா வரும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என சிவனடியார் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.