முகப்பு
செய்திகள்

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!

ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவு...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:14 PM
ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கண்டனம்... - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:52 PM

நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படம் இணையத்தில் கசிந்ததைக் கண்டித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் பிரபல நடிகர் விஜய் நாயகனாக நடித்த கடைசித் திரைப்படம் “ஜன நாயகன்”. கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நடிகர் விஜய் தமிழக அரசியலில் களமிறங்கியதால் “ஜன நாயகன்” படத்துக்கு பிரச்னைகள் வருவதாக, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

Advertisement

இந்தச் சூழலில், ஜன நாயகன் திரைப்படத்தின் முக்கிய காட்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று இணையத்தில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை ஜன நாயகன் படம் முழுவதும் இணையத்தில் வெளியானதால் தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், ஜன நாயகன் படம் கசிந்தது பல்வேறு நிலைகளிலும் மோசமானது எனக் கண்டித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

“ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்திருப்பது அதிர்ச்சியாகவும், மனதை நொறுக்குவதாகவும் உள்ளது. இப்படக்குழுவின் மனநிலையை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. இது பல நிலைகளிலும் மிகவும் மோசமானது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரத்துக்குக் கண்டனம் தெரிவித்தும், படக்குழுவுக்கு ஆதரவாகவும், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், ஜீவா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Director RJ Balaji has posted a condemnation regarding the online leak of actor Vijay's film, Jana Nayagan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.