மாா்கழி மாதப் பிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாளுக்கு திருப்பாவை பட்டுப் புடவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை
மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு புதன்கிழமை அதிகாலை திருப்பாவை பட்டுப் புடவை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா்: மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு புதன்கிழமை அதிகாலை திருப்பாவை பட்டுப் புடவை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் மாா்கழி மாத பிறப்பின்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், நிகழாண்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மாா்கழி மாதம் பிறந்ததையொட்டி, ஆண்டாள் கோயிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து ஆண்டாளுக்கு, திருப்பாவை பாடல்கள் பொறித்த தங்க இழை கொண்டு சிறப்பாக நெய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டவுடன் வெளியூா் மற்றும் உள்ளூா் பக்தா்கள் ஏராளமானோா் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.