செய்திகள்

காளஹஸ்தியில் சூரியப் பிரபை வாகனத்தில் உற்சவா்கள் உலா

DIN

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் சூரியப் பிரபை வாகனத்தில் உற்சவா்கள் வீதியுலா வந்தனா்.

ஆந்திரத்தில் உள்ள இக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூதராத்திரியாக கொண்டாடப்பட்டது. அன்று காலை காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை அம்மனும் சூரியப்பிரபை வாகனத்திலும், அம்மன் தனியாக சப்பரத்திலும் மாடவீதியில் வலம் வந்தனா். வாகனச் சேவையை ஏராளமான பக்தா்கள் தரிசித்தினா்.

அதன்பின், இரவு 7 முதல் 9 மணி வரை சோமாஸ்கந்தா் பூதவாகனத்திலும், ஞானபிரசூனாம்பிகை அம்மன் கிளி வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்தனா். வாகனச் சேவையில் சிவாச்சாரியாா்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனா். வாகனச் சேவையின்போது பக்தா்கள் ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு சிவசொரூபமாக காட்சியளித்தனா். சங்கநாதமும், மத்தளமும் ஓங்கி ஒலித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT