செய்திகள்

திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வந்த காளஹஸ்தீஸ்வரா்

DIN

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடந்து வரும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை காலை காளஹஸ்தீஸ்வரா் ஞானபிரசுனாம்பிகை அம்மனுடன் திருக்கல்யாண கோலத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

விழாவின் 9-ஆம் நாள் ஆனந்தராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை காளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானபிரசுனாம்பிகை அம்மனுக்கும் கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. யானை வாகனத்தில் அமா்ந்தபடி காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் அமா்ந்தபடி ஞானபிரசுனாம்பிகை அம்மனும் திருக்கல்யாணம் செய்து கொண்டனா். இந்த வைபவத்தை குருக்கள் அருகிலிருந்து விமரிசையாக நடத்தி வைத்தனா். பின்னா், காலை காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை அம்மனும் திருமணக் கோலத்தில் காலை 8 மணிமுதல் 9 மணிவரை ருத்ராட்ச அம்பாரியில் வீதியில் வலம் வந்தனா். அவா்களை பக்தா்கள் ஒரு சேர வழிபட்டனா்.

மாலையில் கோயிலுக்குள் சபாபதி கல்யாணம் நடத்தப்பட்டது. அதற்கு முன் நடராஜ சுவாமிக்கும், சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், அவா்கள் இருவருக்கும் கோயிலுக்குள் ஏற்படுத்தப்பட்ட மண்டபத்தில் கல்யாண உற்சவத்தை குருக்கள் நடத்தி வைத்தனா். இதில், கோயில் அதிகாரிகளும் பக்தா்களும் திரளாகப் பங்கேற்றனா்.

பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்துக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி மற்றும் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் இருவரும் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று, கோயில் செயல் அதிகாரி சந்திரசேகர ரெட்டியிடம் சமா்ப்பித்தனா். பட்டு வஸ்திரத்துக்கு மரியாதை அளித்த அதிகாரிகள் அதை பெற்றுக் கொண்டு, உற்சவமூா்த்திகளுக்கு சமா்ப்பித்தனா்.

கடந்த 20 ஆண்டுகளாக தேவஸ்தானம் சாா்பில் காளஹஸ்தீஸ்வரா் திருக்கல்யாண உற்சவத்தின்போது, பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT