முகப்பு
செய்திகள்

ஜாதகத்தில் சுப குரு அம்பியா? அன்னியனா?

ராஜ கிரக குரு மிகவும் நல்லவர், முழு சுபர், நல்ல செயல்களைச் செய்வார் என்று எல்லோராலும் சொல்லப்படுபவர்.

Updated On : 17 நவம்பர், 2020 at 2:09 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

ராஜ கிரக குரு மிகவும் நல்லவர், முழு சுபர், நல்ல செயல்களைச் செய்வார் என்று எல்லோராலும் சொல்லப்படுபவர். ஜாதகரின் தசாபுத்தியில் அல்லது குருப் பெயர்ச்சி காலங்களில் நல்லது செய்துவிடுவார் என்ற நினைப்பு அனைவர் மனதிலும் ஒரு ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். குரு நல்லவர் என்று ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அவர் அசுபராக அதாவது அம்பியாகவும், அந்நியனாகவும்  கலந்து வேலை செய்வார். குருவின் சூட்சமங்களை நுட்பமாகப் பார்க்கவேண்டும்.

குருவைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல வேண்டுமானால் அவரவர் குற்றங்களை சுட்டிக்காட்டி தம்பட்டம் அடித்துவிடுவார். அதனால் தான் அவரை அனைவருக்கும் ஆசான் என்று கூறுகிறோம். சிலருக்குப் பகைவராகச் செயல்படும் குரு முக்கியமாக ஜாதகத்தில் குரு பலம்  குறைந்தால் நன்று என்பது சூட்சமம். இது தவிர குருவானவர் அசுப பாவங்களில் பரிவர்த்தனை அல்லது வக்கிரம் பெற்றிருந்தால் பலன்கள் சற்று மாறுபடும் என்பது சூட்சம விதி.

அவர் இருக்கும் வீட்டை விடப் பார்க்கும் வீடு பலம் பெரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தனித்த குருவை விடச் சேர்க்கை பெற்ற குரு அதீத பலம் பெறுவார். குருப் பெயர்ச்சி வரும் காலம் அவரவர் மனதிலும் குருவானவர் நமக்கு என்ன செய்வார்? எவ்வாறெல்லாம் பலனளிப்பர் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். குரு தசையானது அல்லது கோட்சார பெயர்ச்சி ஒருவரை நல்ல நிலையில் கொண்டு செல்லும் அல்லது சாக்கடையில் தள்ளிவிடும் என்பது உண்மை. இதில் கோட்சர பலனை விட தசாபுத்தியின் பலன்கள் 100% ஜாதகருக்கு கட்டாயம் அவரவருக்கு ஏற்ப பலன்கள் நடந்தேறிவிடும் .

Advertisement

இந்த கிரகங்களின் டைட்டில் ஹீரோ குரு ஒரு இயற்கை  சுபர். ஆனால் லக்கின ரீதியாக குருவானவர் நல்லவரா கெட்டவரா என்று பார்க்க ஒரு ஜோதிட அலசல் மற்றும் சூட்சமங்களை பார்ப்போம்.

  • எடுத்துக்காட்டாக குருவானவர் ரிஷபத்திற்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியாகவும் இருமுகம் கொண்ட ஆதிபத்யங்கள் கொண்டவர். ஒரு முகம் அந்நியனாகவும் மற்றொரு முகம் அம்பியாகவும் செயல்படுவார். யார் முதலில் வேலை செய்வார் என்பது அவரவர் ஜாதகத்தை கொண்டு ஆராய்ந்து சொல்ல வேண்டும். அஷ்டமாதிபதி குருவாக இருந்தால் அவர் கெட்டுவிட வேண்டும் அதாவது அவர் மறைவு ஸ்தானங்களில் மறையவேண்டும் அல்லது நீச்சம் பெற வேண்டும். கெட்டவன் கெட்டுவிட்டால்  ராஜ  யோகம் என்பர்.  ஆனால் ராஜ யோகத்தை தரவில்லை என்றாலும் ஒருவித கெடுதலும் செய்யாமல் இருப்பது நன்று. ஜாதகருக்கு குரு முழு பாவியாக இருந்தால், அதுவே ஒருசிலருக்கு குரு தசை குருபுத்திகளில் ஆளையே  விழுங்கிவிடும்.

  • குரு அதீத அசுபரா செயல்படும் ராசிகள் மிதுனம், கன்னி, துலாம்   லக்கினக்காரர்களுக்கு குரு கெட்டுவிட்டால் நன்று என்பது சுருக்கமான விதி.. கும்பத்திற்கு, ரிஷபத்திற்கும் குரு குறைத்து பலன்களை தர வல்லவர்.

  • கெட்டுவிட்டால் என்றால் என்ன? ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு யாருக்கெல்லாம் நல்லவர் இல்லையோ அவருக்கு குரு 6, 8, 12இல் மறைந்தால் அல்லது நீச்சம் பெற்றால் நன்று. தன் கெட்ட வேலையை செய்யாமல் இருக்க சுபர் கெட்டுவிட வேண்டும்.

  • குரு நின்ற இடம் பாழ் என்பது பழமொழி. அதற்கேற்ப சித்தர் போகரின் சிஷ்யன் புலிப்பாணி சித்தரின் கூற்று என்னவென்று பார்ப்போம் .

பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு

பரமகுரு ஜென்மத்தில் வந்தபோது

கூறப்பா கோதண்டபாணி வீரன்

கொற்வனே குடியேறிப் போகச் செய்தார்

சீரப்பா ஜென்மனுக்குவேதைமெத்த  

சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்

வீரப்பா வேந்தனுட தோஷமுண்டு

  விளம்பினேன் கோள்சார வினையைக்கேளே.

பிரசித்தனான குருபகவான் கோச்சாரத்தில் ஜென்மத்துக்கு வந்தால் அவனால் துன்பமே விளையும். கோதண்டராமன் வனவாசம் சென்றதும் இவனால் தான். செம்பொன் விரயமாகும். அரசர்களுடைய கோபமும் இச்சாதகருக்கு விளையும் என்று கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். ஜென்மகுரு பொல்லாதவர் என்று ராமனின் வனவாசமே உதாரணம் ஆகும்.

  • தற்பொழுது அசுபரான குரு தான் கோட்சர குருப் பெயர்ச்சி எவ்வாறு வேலை செய்யும் என்று பார்ப்போம்.  குருப்பெயர்ச்சி 5 கார்த்திகை, 20 நவம்பர் 2020 மேல் அனைவர்க்கும் சிறிதளவேனும் நன்மைபயக்கும். முக்கியமாக மகர  லக்கினம் / ராசியில் இருந்த ஜென்ம குரு தன் பார்வையை அசுர குரு வீடான ரிஷபம்,  குருவின் உச்சம் பெரும் கடகம்,  பாதகாதிபதி கன்னி  வீட்டை பார்த்து,  அங்கு குரு தன் நேத்ர கடாட்சத்தை தர வல்லவர். ஆனாலும் மகரத்திற்கு குருவானவர் நீச்ச வீட்டிலிருந்து சனியோடு சேரும்பொழுது செய்யும் தொழிலில் அல்லது கூட்டு தொழிலில் மாற்றம் ஏற்படும். களத்திர பாவத்தை பார்க்கும் பொழுது திருமணம் கைகூடும் மற்றும் பிரிந்த தம்பதியர்கள் சேரும் காலம். இருந்தாலும் ஜென்ம குரு சிறிது துன்பத்தை கொடுக்கும் என்று மேலே குறிப்பிட்ட புலிப்பாணியின் கூற்றை பாருங்கள். ஆனால் இந்த கோட்சரத்தில் குரு தனித்து இல்லாமல் சனியோடு சேரும் காலம் அதனால் கெட்ட பலன்கள் சிறிது விதிவிலக்கு உண்டு.

  • தற்பொழுது கோட்சர குருவானவர் அசுப வீட்டை எப்படி பலப்படுத்துவார் என்று பார்ப்போம். ரிஷப லக்கினம் / ராசிக்கு குருவானவர் லக்கினம் அல்லது ராசியை, ஐந்தாம் பாவம் மற்றும் மூன்றாம் பாவத்தை பார்க்கும்பொழுது அவர் சுபராக இங்கு வேலை செய்வார்.  முக்கியமாக  கடவுளின் கிருபையோடு குழந்தை பாக்கியம், முயற்சியால் வெற்றி வாகை, மற்றும் தேடிய குலசாமி யார்வழியலாவது கிடைத்தல். குழந்தைகளுக்கு மகிழ்ச்சிக்குறிய லாபம் கிடைத்தல் என்று நல்ல கீர்த்தியை சொல்லலாம். ரிஷபம் லக்கினம் அல்லது ராசிக்கு குரு 9ம் இடம் சஞ்சரிப்பது முக்கியமாக அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது நன்று இருந்தாலும் லாபாதிபதி நீச்சம் பெறுவது நன்று அல்ல. இதில் அவரவர் தசை புத்திக்கு ஏற்ப ஆதிபத்தியம் வேலை செய்யும்.

  • அதேபோல் மிதுனம் லக்கினம் மற்றும் ராசிக்கு பாதகாதிபதி குருவானவர் 2,4,12 பாவத்தை பலப்படுத்துவர் அதாவது குடும்ப சுகத்தையும், வீடு வாகனம் மற்றும் வருமானத்தையும், ஜாதகருக்கு சுப செலவையும் அரங்கேற்றுவர்.  வருமானம் என்பது ஆயிரமா, லட்சமா, கோடியா என்பது அவரவர் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். ஏழாம் அதிபதி, 10 ம்  அதிபதி குருவானவர்  அஷ்டமாதிபதி வீட்டிற்கு செல்வது நன்று என்று சொல்ல முடியாது. இவற்றை மாணவர்கள் ஆராய வேண்டும்.

  • கன்னியில்  பாதகாதிபதி ரூபமான குருவானவர் தன் வீட்டை பார்த்து பலப்படுத்துவது, 9ம், 11ம் பாவத்தை பார்ப்பது மிக்க நன்று. உடல் ரீதியான முன்னேற்றம், தந்தை மற்றும் மூத்த சகோதரனால் நன்மை, தர்ம சிந்தனை, பங்கு அல்லது மற்றவழியில் திடீர் வருமானம், வீடு கட்ட கடன் கிடைத்தல், குலசாமி மற்றும் பரிகார கோவில் செல்வது, தானம் தர்மம் செய்தல் என்று நற்பலன்களை அடுக்கிக்கொண்டு போகலாம். திரிகோணத்தில் குரு செல்வது கன்னிக்கு நற்பலன்களே.

  • அதுபோல் துலாத்திற்கு குரு கெட்டவரானாலும் அவர் பெயர்ச்சி பார்வை பலம் பார்ப்போம். குரு 8,10,12ம்  வீட்டை பார்ப்பது நன்று.  துலா லக்கினம் / ராசிக்காரர்களுக்கு குரு தொழில் மூலம் லாபம், நகை மற்றும் சுப செலவுகள் செய்வார்கள், பழய வீடு வாங்கும் நேரம். நீண்ட நாள் நோய் தீர்வு பெரும் நேரம். கோட்சர குரு நான்கில் சஞ்சரிப்பது நன்று ஆனால் சனியோடு சஞ்சாரம் செய்வது ஒருவித மாற்று பலன்களை தரவல்லவர்.

ஒருசில ராசிக்கு அவயோகர் என்று கூறப்படும் குரு கோட்சாரத்தில் எவ்வாறு நற்பலன்களை செய்வார் என்று சில எடுத்துக்காட்டுகள் வாயிலாக பார்த்தோம். ஜாதகத்தில் குரு எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும் முக்கியமாக தர்ம பாதையில் தங்கள் பணிக்ககளை செவ்வனே செயல்படுத்தினால், ஆசானிடம் (குரு) பெரிய தண்டனைகளை பெறமாட்டீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. உங்களுக்கு அவர் யோகராக இருந்து நற்பலன்ககளை நல்குவார்.

குருவே சரணம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜோதிட ஆராய்ச்சி நிலையம்

ஜோதிட சிரோன்மணி தேவி

Whatsapp: 8939115647

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.