FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

பொறியியல் கல்லூரிகளிலிருந்து அழைப்பு வந்தால் அந்தக் கல்லூரியின் முழு பெயரை கேட்க வேண்டும்

Updated On : 11 ஏப்ரல் 2026, 9:01 am IST
மாணவர்கள் - File photo
பகிர்:

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணையதங்களுக்கும் சென்று தங்களது விவரங்களை சமர்ப்பித்து வருவார்கள்.

சிலர், பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பித்திருப்பார்கள். ஆனால்,12ஆம் வகுப்புப் படித்த மாணவர்களின் பெற்றோர் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் எப்படித்தான் எத்தனை கல்லூரிகளுக்குத்தான் கிடைக்கும் என்பதை அறியவே முடியாது.

எனவே, பெற்றோருக்கு தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளின் பெயரிலும் போன் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். ஆனால், இதில் பல விவரங்கள் ஒளிந்திருக்கும்.

Advertisement

Advertisement

அதாவது, பெற்றோர் ஒரு முன்னணி பொறியியல் நிறுவனத்தின் இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்திருப்பார்கள். அதே பொறியியல் கல்லூரி பெயரில்தான் அழைப்பும் வரும். பெற்றோரும் தாங்கள் விசாரித்த கல்லூரியிலிருந்துதான் அழைப்பு வருகிறது என்று எண்ணி விவரங்களைக் கேட்டும் தங்களது விவரங்களை அளித்தும் கொண்டு வருவர்.

ஆனால், உண்மையில், தற்போது பல முன்னணி கல்லூரிகள் ஒரே பெயரில் பொறியியல் கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் வெவ்வேறு இடங்களில் தனித்தனி கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. இதனால் பொறியியல் கல்லூரிக்கு விவரங்களை அளித்த மாணவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி கல்லூரியில் இருந்து அழைப்பு வரும். இந்த வேறுபாடுகள் தெரியாமல் ஏதேனும் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் எடுத்துவிட்டால், பிறகுதான் உண்மை நிலை தெரிய வரலாம்.

சில பெற்றோருக்கு ஆரம்பக் காலத்தில் இவ்வாறு இரண்டு இரண்டாக கல்லூரிகள் செயல்படுவது தெரியாமல்கூட இருக்கலாம். எனவே, ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.

மிக முன்னணி பொறியியல் கல்லூரிகள் பெற்றோருக்கு அழைப்பு விடுப்பதில்லை. மாணவர் சேர்க்கை குறைந்த அதனுடன் இணைக்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி போன்றவைதான் அழைப்புகளை மேற்கொள்ளும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

summary

If you receive an invitation from an engineering college, you should ask for the full name of the college.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments