செய்திகள்

திருப்பதி லட்சுமி நாராயணா் கோயிலில் நவ. 25-இல் மகாசம்ப்ரோக்ஷணம்

தினமணி

திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபத்தில் உள்ள லட்சுமி நாராயணா் கோயிலில், வரும் 25-ஆம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் மலை அடிவாரப் பகுதியான அலிபிரியில் பாதாலு மண்டபம் உள்ளது. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தா்களுக்கான நடைபாதை இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த மண்டபத்தின் இடது பகுதியில் லட்சுமி நாராயணா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 25-ஆம் தேதி அஷ்டபந்தன ஜீரணோத்தாரண மகாசம்ப்ரோக்ஷணம் நடக்க உள்ளது.

இதனை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள், வைதீக காரியங்கள் தொடங்கின. மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வக்சேனா் ஆராதனை, சேனாதிபதி உற்சவம், மிருத்சங்கரணம், அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடந்தன. யாகசாலை பூஜைகள் 24-ஆம் தேதி இரவு வரை நடக்கின்றன.

25-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ஹோமங்கள், 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகாபூா்ணாஹுதி, தனுா் லக்னத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப ஆராதனை, விமான சம்ப்ரோக்ஷணம் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT