செய்திகள்

நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு அங்குராா்பணம்

தினமணி


திருப்பதி: திருமலையில் தொடங்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற வியாழக்கிழமை மாலை அங்குராா்ப்பணம் நடத்தப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தாண்டு அதிக மாதம் காரணமாக இரு பிரம்மோற்சவங்களை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பாக தனிமையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டாவது பிரம்மோற்சவமான நவராத்திரி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை (அக். 16) தொடங்க உள்ளது.

வைகானச ஆகம விதிப்படி, வைணவ கோயில்களில் உற்சவங்கள் தொடங்குவதற்கு முன் அவை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடைபெற அங்குராா்ப்பணம் எனும் முளைவிடுதல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நவராத்திரி பிரம்மோற்சவம் எவ்விதத் தடங்கலும் இன்றி நிறைவு பெற வியாழக்கிழமை மாலை முளைவிடுதல் உற்சவம் நடத்தப்பட்டது.

அதற்காக ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனா் வியாழக்கிழமை மாலை திருக்கோயில் அருகில் உள்ள நந்தவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள புற்று மண்ணை அா்ச்சகா்கள் எடுத்து வந்தனா். அந்த மண்ணை மண்டபத்தில் கொட்டி, அதில் பூதேவியின் உருவத்தை வரைந்து, அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து மண் பாலிகைகளில் இட்டு, அதில் ஊற வைத்த நவதானியங்களை முளைக்க விட்டனா். இந்த நிகழ்வை அங்குராா்ப்பணம் என்று தேவஸ்தானம் அழைக்கிறது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கான வாகன சேவைகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT