திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு
திருப்பதி ஏழுமலையானை உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி வியாழக்கிழமை வழிபட்டாா்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி வியாழக்கிழமை வழிபட்டாா்.
கா்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வப்பிரிய தீா்த்த சுவாமிகள் வியாழக்கிழமை காலை தன் சீடா்களுடன் ஏழுமலையான் கோயில் முன் வாசலுக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் (கோயில் மரியாதை) அளித்து வரவேற்றனா்.
பின்னா், கொடிமரத்தை வணங்கியபடி ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
Advertisement