பண வரவு சீராக இருக்கும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 23 - ஏப்ரல் 29) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 23 - ஏப்ரல் 29) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட செயல்களில் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் செலவுகளைக் கவனமாக செய்தால் பிரச்னைகளை சமாளிக்கலாம். கூட்டு வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகள் வழக்கமான விளைச்சல் குறையும் என்பதால் மிகவும் கவனம் தேவை. புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முயற்சி எடுப்பீர்கள். மேலிடத்தின் பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் திட்டமிட்ட செயல்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான அன்னியோன்னியம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் சற்று கவனக் குறைவு ஏற்படும். ஆதலால் அவ்வப்போது பாடங்களை நன்றாக மனப்பாடம் செய்து வரவும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 24.
சந்திராஷ்டமம்: 29.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உங்களின் பெயர், புகழ் உயரும் படியான காரியங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். பணம் கடன் தருவது நல்லதல்ல.
உத்தியோகஸ்தர்கள் தைரியத்துடன் எதையும் சமாளிப்பீர்கள். எனினும் மேலதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறந்து வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தடைகளையும், எதிர்ப்புகளையும் சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து மிகுதியால் விளைச்சல் அதிகரிக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பயணங்களால் நன்மைகள் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைக்குத் தகுந்த மதிப்பும், அங்கீகாரமும் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். கணவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவமணிகளுக்கு ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை மேற்கொண்டால் மனம் அமைதியாக இருக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 25.
சந்திராஷ்டமம்: இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
திட்டமிட்ட வேலைகள் சற்றே தள்ளிப் போகும் வாய்ப்பு உண்டு. சுபகாரியங்கள் நடந்தேறும். மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். பெற்றோரின் உடல்நிலையில் ஆரோக்கியமான முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு கடும் போட்டிகள் நிலவும். ஆதலால் புதிய முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது. நிலத்தகராறு, வரப்புப் பிரச்னை போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் அதிக முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். தொண்டர்களையும் அரவணைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் வீண் செலவுகள் செய்ய நேரிடும். கவனம் தேவை. ரசிகர்களுக்கு உதவி புரிந்து நற்பெயர் எடுப்பீர்கள். பெண்மணிகளுக்கு தாய்வழி உறவினர்களால் மனம் சந்தோஷம் அடையும். தந்தையின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 24, 25.
சந்திராஷ்டமம்: இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வருமானம் சீராக இருந்தாலும் கடுமையாக உழைக்க நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். பெரியவர்களை கலந்து ஆலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும். தீயோர் நட்பைத் தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு சீராக இருக்கும். மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளைத் தேடித் தரும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் தங்கள் பதவியை தொண்டர்களின் ஆதரவுடன் தக்கவைத்துக் கொள்வீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புக்கள் உங்களுக்கு கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான காலகட்டமிது. புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம்: சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலை சீராக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். எதிரிகள் உங்களிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள் கால நேரத்தை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் எதுவும் கொடுக்க வேண்டாம். குறைந்த முதலீட்டில் வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகள் கால்நடைகளால் பலனடைவீர்கள். உற்பத்தி பொருள்களின் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழியிலும் உங்களைத் தேடி வரும். கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.வருமானம் பெருகும்.
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். அதே நேரம் அதிக செல்லம் கொடுக்காதீர்கள். மாணவமணிகள் கல்விக்கான பயிற்சிகளைச் சற்று கூட்டிக்கொள்ளவும். கடுமையான உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். உடற்பயிற்சி தேவை.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 26, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
அனைத்து வேலைகளையும் நிதானத்துடனே செய்வீர்கள். உங்களின் கவலைகள் சற்று குறையும். அசதியும் சோம்பலும் ஆட்கொள்ளும். உடல்நிலையிலும் முன்னேற்றமான சூழல் நிலவாது. அநாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு தக்க தருணத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்குப் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் தொடரும். நீர்ப்பாசன வசதிக்கு செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு பல தடைகளால் உங்கள் முன்னேற்றம் பாதிப்புக்குள்ளாகும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் விளையாட்டில் அதிக ஆர்வமும், படிப்பில் கவனக் குறைவும் ஏற்படும்.
பரிகாரம்: இஞ்சிமேடு பெருந்தேவித் தாயாரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
உங்களின் காரியத்தை எப்பாடுபட்டேனும் முடித்து விடுவீர்கள். அனைத்து செயல்களிலும் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தினரிடம் அன்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமான காலமிது.
உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு. உங்கள் வேலைகளில் சற்று கவனம் தேவை. வியாபாரிகளுக்கு சந்தைகளில் பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வீர்கள். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள். விளைச்சல் பெருகி வருமானமும் ஏற்றம் தரும்.
அரசியல்வாதிகளின் ரகசியத் திட்டங்களை எதிரிகள் அறிந்து கொள்வார்கள் என்பதால் கவனம் தேவை. பிரயாணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினர் வாய்ப்புகளைத் தேடி அலையாதீர்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் விளையாடும் போது கவனம் தேவை. படிப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.
அனுகூலமான தினங்கள்: 24, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். பொருளாதார நிலை சீராக இருக்கும் யோசிக்காமல் பிறருக்கு வாக்கு கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது. உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளவும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிக்கு செலவு சற்று அதிகமாகும். மகசூல் அதிகரித்து வருமானமும் பெருக வாய்ப்பு உண்டு.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அனைத்து காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக நடந்து கொள்வது நல்லது. உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: கந்த கோட்டம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 26, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொருளாதார நிலை சீரடையும். உடல் உபாதைகளால் மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை கவனத்துடன் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வருமானம் பெருகும். விவசாயிகளின் விளைபொருளுக்கு சந்தையில் நல்ல மதிப்பு ஏற்படும். கையிருப்புப் பொருள்களால் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். தொண்டர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் படைப்புக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் நன்றாகவே இருக்கும். செலவினங்களை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வீர்கள். மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி காண்பீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 28, 29.
சந்திராஷ்டமம்: இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உங்களின் திறமை பளிச்சிடும். பொருளாதாரத் தடைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மிக சிந்தனைகளால் சிறப்படைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடாதீர்கள். நன்கு யோசித்து புதிய முதலீடுகளைச் செய்யவும். விவசாயிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். செலவுகள் குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தங்கள் காரியங்களில் சற்று இழுபறி நிலைமை ஏற்படும். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதிக மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்ய வேண்டும். விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.
பரிகாரம்: அஷ்டாசதபுஜ துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 27, 29.
சந்திராஷ்டமம்: 23, 24.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். நினைத்த காரியங்கள் சிறு தடைகளுக்குப் பிறகே நிறைவேறும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை நன்கு திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் பெரிய அளவில் லாபத்தை எதிர்பாராமல் சிறிய முதலீட்டில் வியாபாரத்தைத் தொடங்குங்கள். அகலக்கால் வைக்காதீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பது போன்ற காரியங்களில் சற்று யோசித்து செயல்படவும். கால்நடைகளை பராமரிப்பதில் கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரவு குறையும். தகுந்த அங்கீகாரத்திற்காக மிகவும் சிரமப்படுவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடன் சற்று மனஸ்தாபம் ஏற்படும். கோபத்தை குறைத்து அன்பை வெளிப்படுத்துங்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு அரளி மலர் சாற்றி வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 24, 29.
சந்திராஷ்டமம்: 25, 26.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சகோதர, சகோதரிகள் வழியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்கள் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடும். இதுவரை இருந்த பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தை நவீன முறையில் விரிவுபடுத்திக் கொள்வீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிரை உற்பத்தி செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். நீர்வளம் பெருகும்.
அரசியல்வாதிகள் பெயரும் புகழும் உயரும். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு சரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பெண்மணிகள் பிறரை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உற்றார் உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சி அடையும். மாணவமணிகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். ஆன்மிக சிந்தனை
மேலோங்கும்.
பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 26, 29.
சந்திராஷ்டமம்: 27, 28.