திருப்புவனம் ஸ்ரீமணிமந்திர விநாயகர் கோயிலில் வருடாந்திர சங்கரஹட சதுர்த்தி விழா
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீமணி மந்திர விநாயகர் கோயிலில் வருடாந்திர சங்கரஹட சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீமணி மந்திர விநாயகர் கோயிலில் வருடாந்திர சங்கரஹட சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெற்றது.
திருப்புவனம் நகரின் கதாநாயகனாக வீற்றிருக்கும் நரிக்குடி விலக்கு ரோட்டில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீமணி மந்திர விநாயகர் கோயிலில் வருடாந்திர சங்கரஹட சதுர்த்தி விழா கடந்த 16 ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி கோயில் சன்னதியில் புனிதநீர் கலசங்கள் வைத்து தினமும் ஹோமம் நடத்தப்பட்டது. விழா நாள்களில் இரவு மூலவர் மணி மந்திர விநாயகருக்கும் உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் இரவு உற்சவர் ராஜகணபதி, சிவபூஜை செய்தல்,சேஷ வாகன கணபதி, சாஸ்தா கணபதி, நர்த்தன கணபதி, கல்கி கணபதி, பால கணபதி, சரஸ்வதி கணபதி உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய வைபவமாக கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சங்கரஹட சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் உள்ள புனித நீரால் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு உற்சவர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். சங்கட சதுர்த்தி விழாவில் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று மணிமந்திர விநாயகரை தரிசனம் செய்தனர்.